மேட்டுப்பாளையம், பிப்.15: கடந்த 1998ம் ஆண்டு பிப்.14ம் தேதி நடந்த கோவை குண்டுவெடிப்பில் 58 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனை தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 7 பேரும் பலியானார்கள். இதனையொட்டி, கோவை குண்டுவெடிப்பின் 27ம் ஆண்டு நினைவஞ்சலி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பாஜக நகர தலைவர் உமா சங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் பாஜக கோவை வடக்கு மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் விக்னேஷ், ஆர்எஸ்எஸ் மாநில சேவா பொறுப்பாளர் ஆனந்த், இந்து முன்னணியின் கோவை கோட்டச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், பாஜக மாவட்ட பொருளாளர் பிரபு, சிறுமுகை ஒன்றிய தலைவர் சாமிநாதன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கலைவாணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
The post மேட்டுப்பாளையத்தில் கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி appeared first on Dinakaran.