சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி விக்கிரமன் ஹார்வி செட்டியார் (34). கடந்த 2023ம் ஆண்டு போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து,2023 ஏப்ரல் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் விக்கிரமன் பதிவிடுகையில், அப்போது அதிபராக இருந்த ஹலிமா யாக்கோப் கொல்லப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த அவர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இதனால், போலீசார் அவரை பிடித்து ஆஜர்படுத்தியபோது, நீதிபதியை கத்தியால் குத்த விரும்புவதாக கூறியுள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி புகார் அளித்தார். இந் நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட விக்கிரமனுக்கு 13 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
The post சிங்கப்பூர் அதிபருக்கு கொலை மிரட்டல் இந்திய வம்சாவளிக்கு ஒரு வருடம் சிறை appeared first on Dinakaran.