×

ஹான்ஸ் விற்ற மளிகை கடைக்காரர் கைது

கெங்கவல்லி, பிப்.15: கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில் போலீசார் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபேது, அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்தது தெரியவந்தது. கடை உரிமையாளர் கருணாகரன்(61) என்பவரை கைது செய்த போலீசார், 60 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் கடைக்கு சீல் வைத்து, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

The post ஹான்ஸ் விற்ற மளிகை கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Hans ,Kengavalli ,SI Ganesh Kumar ,Aathur ,Main Road ,Tamil government ,Dinakaran ,
× RELATED சேத்துப்பட்டு, பெரணமல்லூரில் போதை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்