- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டிமுகா அமைப்பு
- ஆர் பாரதி
- சென்னை
- திமுக அமைப்பின் செயலாளர்
- பாரதி
- கவர்னர்
- முதல்வர்
- மு. கே. ஸ்டாலின்
- மாநில செயலாளர்
- ஆர் எஸ் பாரதி
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநரின் கருத்துகள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து ஆங்கில நாளிதழின் கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது. முதல்வர் தனது எக்ஸ் தள டிவிட் பதிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் பதிலடி என்ற போர்வையில், பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது டிவிட் ஆளுநராக அவரது கண்ணியம் இல்லாததை வெளிப்படுத்துகிறது.
அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழ்நாட்டு மக்களை புரிந்துகொள்வதை பற்றி ஆளுநர் பேசுகிறார். அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்? அவர் பாஜவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே. கவர்னரே, ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த விரிவுரைகளும் தேவையில்லை. தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள். மாறாக தமிழ்நாட்டு மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டிற்கு சிறந்தது எது என பாடம் நடத்த வேண்டாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இறையாண்மையை அவமதிக்காதீர்: ஆளுநருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி appeared first on Dinakaran.