- பாஜக
- செல்வப்பெருந்தகா
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஏஎன்எஸ் பிரசாத்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- அஇஅதிமுக
- AIADMK...
சென்னை: தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: அதிமுக உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் நடப்பவை அக்கட்சியின் உள் விவகாரம். அதிமுகவைச் சேர்ந்தவர்களும், அதிமுகவில் இருந்தவர்களும்தான் வழக்கு தொடுத்துள்ளனர். அதில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இருக்கவும் முடியாது. ஆனால், பாஜவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, செல்வப்பெருந்தகை எச்சரிக்கையாக பேச வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post செல்வப்பெருந்தகைக்கு பாஜ எச்சரிக்கை appeared first on Dinakaran.