சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு நாளை தேர்வு தொடங்கும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள பிரைம் பள்ளியில் 19 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 8ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ அங்கீகாரம் கொண்ட அப்பள்ளி, உயர்நிலை கல்விக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என 19 பேரை 10ம் வகுப்பு வரை தயார்படுத்தியுள்ளனர்
தஞ்சை தனியார் பள்ளி விவகாரம் தொடர்பாக மனுவை விசாரித்த ஆட்சியர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்ட பள்ளிக்கு 8ஆம் வகுப்பு வரை கூட அங்கீகாரம் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கீகாரம் இல்லாததால் சம்மந்தப்பட்ட மாணவர்கள் நாளை தேர்வு எழுத முடியாது
NIOS திட்டத்தின் கீழ், வேறு பள்ளியில் வரும் மார்ச் மாதம் விண்ணப்பம் செய்து ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் ஹால் டிக்கெட் கிடைக்காமல் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் காத்திருகின்ற்னர்.
The post தஞ்சை மாவட்டத்தில் அங்கிகாரம் இல்லாத பள்ளியால் பொதுத்தேர்வு எழுத முடியாமல் பரிதவிக்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.