பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சென்ற லாரியை குறிவைத்து குண்டுவெடிப்பு: 11 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சென்ற லாரியை குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. தெற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஹர்னாய் பகுதியில் உள்ள சுரங்கத்துக்குத் ஊழியர்களை கொண்டு சென்ற லாரி ஒன்று தாக்கப்பட்டது. பலுசிஸ்தான், கிளர்ச்சியாளர்கள் பலகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வட்டாரமாகும். மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுக் கருவி ஒன்று சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்தது. லாரி, சுரங்க ஊழியர்களை அவர்கள் வேலை செய்யும் இடத்தில் சேர்த்தவுடன் குண்டு வெடித்தது,” என்று ராணுவ உதவியாளர் கூறினார்.

அந்த வெடிகுண்டு, வேறு இடத்திலிருந்து இயக்கக்கூடிய ஒன்றாக இருந்திருக்கலாம் என்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த ராணுவ உதவியாளர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடித்தபோது தாக்கப்பட்ட லாரியில் 17 சுரங்க ஊழியர்கள் இருந்ததாக அவ்வட்டாரத்தின் இணை ஆணையர் ஹஸ்ரத் வாலி அகா தகவல் தெரிவித்தார். காயமடைந்தோரில் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர் என்று உள்ளூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் அரசாங்க செய்தி தொடர்பாளர் ஷாஹித் ராண்ட் இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

The post பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சென்ற லாரியை குறிவைத்து குண்டுவெடிப்பு: 11 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: