×

காசநோய்க்கு பரிசோதனை அவசியம்

 

விருதுநகர், பிப். 14: காசநோய் உள்ளவர்கள் பரிசோதனைக்கு உட்டுபடுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காசநோய்த் தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருக்கக்கூடாது. தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்க போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2025க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவியாக மாதம் ரூ.500 வீதம் சிகிச்சை பெறும் காலத்தில் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post காசநோய்க்கு பரிசோதனை அவசியம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tamil Nadu government ,Public Health Department ,Dinakaran ,
× RELATED அக்காள், தம்பி கைது ரயிலில் கடத்தி சென்ற புகையிலை பறிமுதல்