×

விசிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

 

உத்தமபாளையம், பிப். 14: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்பேத்கர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் இணையும் விழா நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் பெர்க்குமான்ஸ் முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த இன்னாசிமுத்து, ஆரோக்யராஜ், பைஹத்மீரான் உள்ளிட்டோர் தங்களை விசிகவில் இணைத்து கொண்டனர்.

இதையொட்டி கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு வேட்டி மற்றும் மப்ளர் வழங்கப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை நிர்வாகி ரபீக் செய்தார். இதில் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் அயூப் கான், பாபு, விமல், பிச்சைமுத்து, பாக்யராஜ், அப்பாவு, விஜயகுமார், இராஜா மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் முகாம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post விசிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : Vic ,Uttamapaliam ,Theni ,District ,Uttamapaliam Ambedkar Tidal ,Liberation Leopards Party ,District Treasurer ,Perkumans ,Innasimuthu ,Arogyaraj ,Baihadmiran ,Dinakaran ,
× RELATED தனியார் பஸ் டிரைவர், கல்லூரி மாணவி...