×

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி தீவிரம்

திருவாடானை,பிப்.14: திருவாடானை உட்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவகோட்டையில்இருந்து மங்களக்குடி வழியாக எஸ்பி பட்டினம் வரை நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இருந்து மங்கலக்குடி அருகே நீர் குன்றத்திற்கு பிரிவு சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த சாலையின் இருபுறமும் கோடை காலத்தை முன்னிட்டு சாலை ஓரத்தில் புங்கன், வேம்பு ஆகிய மரங்களை இருபுறமும் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சாலையின் இருபுறமும் மரம் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாடனை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பாக நீர் குன்றம் சாலையில் வேம்பு, புங்கன், மழை வேம்பு நடுவதற்கு கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் கீதா மற்றும் இளநிலை பொறியாளர் ஆய்வு செய்தனர். சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளுக்கு வேலி அமைத்து பராமரிப்பு செய்து வருகின்றனர்.

The post நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Thiruvadana Utkottai Highway Department ,Devakottai ,Mangalakudi ,SP Pattinam ,Neer Kundrath ,Mangalakudi… ,Dinakaran ,
× RELATED போலீஸ் நிலையத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்