- கிராமத்தின் மீது தாக்குதல்
- சிவகங்கை
- சிவகங்கை தாலுகா
- கார்த்திகை ராஜா
- வாணியங்குடி ஊராட்சி
- சாமியார்பட்டி
சிவகங்கை, பிப். 14: சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்குள்ளேயே கிராம உதவியாளரை (தலையாரி) தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாணியங்குடி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் கார்த்திகை ராஜா. இவரிடம் சாமியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஒரு நிலத்திற்கு அடங்கல் கேட்டுள்ளனர். கார்த்திகைராஜா, ஏற்கனவே அந்த நிலத்தின் உரிமையாளர் அடங்கல் பெற்றுள்ளதாகவும், உரிமையில்லாதவர்களுக்கு வழங்க முடியாது என்றும், இது குறித்து விஏஓவிடம் தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாலுகா அலுவலகத்திற்குள் சென்று கார்த்திகைராஜாவையும், மற்றொரு தலையாரியான கொண்டையப்பனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post கிராம உதவியாளர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.