×

அஞ்சலகம் மதுரைக்கு மாற்றம் பாதுகாப்பின்றி பிரிக்கப்படும் தபால்கள்

பரமக்குடி,பிப்.14:பரமக்குடியில் இயங்கி வந்த ரயில்வே அஞ்சலக பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றம் செய்ததால், இடவசதி இன்றி பாதுகாப்பு இல்லாமல் பேருந்து நிலையத்தில் பிரிக்கப்படும் அவலம் நீடிக்கிறது. பரமக்குடி ரயில்வே நிலையம் அருகில் கடந்த 1984ம் ஆண்டு ஒருங்கிணைந்த சிவகங்கை, விருதுநகர் ,தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பெண் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இதனிடையே இருமுறை மதுரைக்கு மாற்றப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வணிகர் சங்கங்கள், வழக்கறிஞர்கள் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இத்திட்டம் கைவிடப்பட்டு பரமக்குடியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கடும் எதிர்ப்பையும் மீறி பரமக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் தற்போது, இடவசதி இல்லாததால், பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய தபால்கள் பரமக்குடி பேருந்து நிலையத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல், ஆங்காங்கே சிதறி கிடக்கும் நிலையில் தபால்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. வாகனத்தில் இருந்து பேருந்துக்காக பயணிகள் நிற்கும் பகுதியில் தபால்கள் தூக்கி எறியப்படுவதால் தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆகையால், தபால்களை பிரித்து எடுத்து செல்வதற்காக அலுவலகம் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக தபால்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அஞ்சலகம் மதுரைக்கு மாற்றம் பாதுகாப்பின்றி பிரிக்கப்படும் தபால்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Paramakudi ,Railway Post Office ,Paramakudi Railway Station ,Sivaganga ,Virudhunagar ,Thoothukudi ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED மதுரையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து