×

பள்ளியில் அநாகரீகமாக நடந்த ஆசிரியரின் கல்வி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்

 

திருப்பூர், பிப்.14: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், மாநில மகளிரணி பாசறை செயலாளர் சீதாலட்சுமி, தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களிடம் அநாகரிகமாக நடந்த கணித ஆசிரியர் சுந்தரவடிவேல் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே சுந்தரவடிவேல் என்பவரின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.  மேலும், அவர் எந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்வி நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்று அரசு சான்றிதழ் வழங்க வேண்டும். அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லுரிகளில் மாணவர்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் கல்வியை மேற்கொள்ள குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அந்த குழு வாயிலாக மாணவர்களுக்கு அவர்களின் உரிமை,மனவலிமை,பாதுகாப்பற்ற சூழலை அணுகும் முறை என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் வகையில் அந்த குழு வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனு அளிக்கும் போது ஊழல் ஒழிப்பு பாசறை ஈஸ்வரன், தொழிற்சங்க பாசறை சுரேஷ்பாபு,தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் அபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பள்ளியில் அநாகரீகமாக நடந்த ஆசிரியரின் கல்வி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Collector ,Tiruppur South Legislative Assembly ,Naam Tamilar Katchi ,State Women's Union Camp ,Seethalakshmi ,South District ,President ,Ratna Manohar ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் போக்குவரத்து அலுவலர்கள்...