கோவை, பிப். 14: கோவை சித்ரா பகுதியில் பீளமேடு போலீஸ் ஏட்டு சென்ராயன் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக தனியார் பஸ் வந்தது. அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த போலீஸ்காரர் சென்ராயன், டிரைவரிடம் செல்போன் ஒட்டியபடி செல்லலாமா? என கேட்டுள்ளார்.
அப்போது போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசிடம் டிரைவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சென்ராயன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தனியார் பஸ் டிரைவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காளிதாஸ் என தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
The post செல்போன் பேசியபடி பஸ் ஒட்டிய டிரைவர்: போலீசுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.