×

2 நாளுக்கு வரி வசூல் கிடையாது கோவை மாநகராட்சி அறிவிப்பு

 

கோவை, பிப்.14: சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் உள்ள யுடிஐஎஸ் மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளை முதல் நாளை மறுநாள் வரை (15 மற்றும் 16ம் தேதி ) நடைபெறும். எனவே, இந்த இணைப்பு இன்று இரவு 8 மணி முதல் தற்காலிகமாக இயங்குவது நிறுத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களில் உள்ள வரிவசூல் மையங்கள் மற்றும் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து வரி வசூல் மையங்களிலும் வரிவசூல் பணிகள் மற்றும் வரி செலுத்தும் அனைத்து சேவைகளும் இன்று இரவு 8 மணி முதல் வரும் 16ம் தேதி தற்காலிகமாக இயங்காது என கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post 2 நாளுக்கு வரி வசூல் கிடையாது கோவை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Coimbatore ,UDIS ,Chennai ,Dinakaran ,
× RELATED சாலைகளில் சுற்றித் திரியும்...