×

பைக் திருடிய வாலிபர் கைது

 

ஈரோடு, பிப். 14: ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (26). தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி, அவரது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த அவரது பைக் திருடு போனது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியதில், பைக் திருட்டில் ஈடுபட்டது சேலம் மாவட்டம் மேட்டூர் மல்லிகுந்தம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தவமணி மகன் வைரமணி (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து வைரமணியை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் சிறையில் அடைத்தனர். கைதான வைரமணி மீது பைக் திருட்டில் ஈடுபட்டதாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post பைக் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,John Britto ,Vandiyuran Kovil Road, Karungalpalayam, Erode ,
× RELATED மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி தரையில் உருண்டு வந்து மனு