×

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

 

ஈரோடு, பிப்.14: ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி நேரு நகர் பகுதியில் நேற்று முன்தினம் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் எஸ்ஐ மேனா மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். இதில், ஸ்கூட்டரில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், பு.புளியம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (47) என்பதும், இட்லி மாவு அரைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும், இதற்காக பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிரபாகரன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,030 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்து, பிரபாகரனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர்.

The post ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,SI Mena ,Civil Property Crime Investigation Division ,Police Inspector ,Sudha ,Nehru Nagar ,Pu. Puliyampatti, Erode district ,Dinakaran ,
× RELATED மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி தரையில் உருண்டு வந்து மனு