×

தாசில்தாரை ஆபாசமாக திட்டிய விசிக நகர செயலாளர் கைது

செஞ்சி, பிப். 14: செஞ்சியில் தாசில்தாரை செல்போனில் ஆபாசமாக திட்டிய அனந்தபுரம் விசிக நகர செயலாளரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி தாசில்தார் ஏழுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரை ஆபாசமாக திட்டி பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாசில்தார் ஏழுமலை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு செஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், மிரட்டல் விடுத்த செல்போனை தொடர்பு கொண்டபோது, அந்த நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனந்தபுரம் நகர செயலாளர் காத்தமுத்து என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.

The post தாசில்தாரை ஆபாசமாக திட்டிய விசிக நகர செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Vishika City Secretary ,Tahsildar ,Senchi ,Ananthapuram ,Ezhumalai Taluk ,Dinakaran ,
× RELATED கிணற்றில் லாரி கவிழ்ந்து 300 நெல் மூட்டைகள் சேதம்