சென்னை: பிரபல ஆர்ட் டைரக்டர் சுரேஷ் கல்லேரி (57), நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தமிழில் வெளியான தெனாவட்டு, குட்டிப்புலி, துள்ளி விளையாடு, என்ன சத்தம் இந்த நேரம், வணக்கம்டா மாப்ள, ஜெயில், ராஜவம்சம், அநீதி, மத்தகம், பிளாக் ரோஸ் போன்ற படங்களுக்கு ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியவர் சுரேஷ் கல்லேரி. சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் என்ற படத்திலும் அவர் பணியாற்றி இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக ரத்த அழுத்தம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். மறைந்த சுரேஷ் கல்லேரிக்கு மனைவி இருக்கிறார். சுரேஷ் கல்லேரியின் உடல் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.
The post ஆர்ட் டைரக்டர் சுரேஷ் கல்லேரி மரணம் appeared first on Dinakaran.