- ராமதாஸ்
- ஐரோப்பிய ஒன்றியம்
- திண்டிவனம்
- பமகா
- விதியாபுரம் மாவட்ட
- ப.
- தமிழ்நாடு அரசு
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- உச்ச நீதிமன்றம்
- தின மலர்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.என்.சி கல்வி நிலையங்களை திறந்து மும்மொழி கொள்கையை நடமுறைப்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனால் ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளதை பாமக கண்டித்துள்ளது. நிதியை விடுவிக்க வலியுறுத்தி இருந்தும் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கவில்லை. மேலும் குஜராத், பீகாருக்கு பகிர்ந்து அளித்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் நிதியை பீகார், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு வழங்கியிருந்தால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் தான் தமிழகத்தின் உரிமையை பெற முடியும். கோதாவரி, காவிரி நீர் இணைப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. 2002ஆம் ஆண்டில் நதி இணைப்பு குழு உருவாக்கப்பட்டதுபோல் குழு உருவாக்க வேண்டும். அதற்காக முதலமைச்சர் மாநாட்டினை நடத்த வேண்டும். பெரியார் எல்லா மக்களுக்கும் சுய மரியாதையோடு வாழுங்கள், சிந்தியுங்கள் என சுயமரியாதை கருத்துகளை கூறிவிட்டு சென்றிருக்கிறார். அவரைப் பற்றி இழிவாக யார் பேசினாலும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
* விஜய் கட்சி குறித்து கேள்வி குழந்தையாக நடித்த ராமதாஸ்
த.வெ.கவில் குழந்தைகள் அணி உள்ளது குறித்து கேட்டதற்கு, ‘ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அணிகளை வைத்துள்ளது. அது பற்றி நாம் என்ன சொல்ல முடியும்’ என்று கூறிய ராமதாஸ், தற்போது குழந்தைகள் என்ன செய்கின்றன தெரியுமா? என கூறியபடி ஒரு செல்போனை கையில் எடுத்தார். பின்னர் செல்போனை பார்த்தபடி குழந்தை உணவு சாப்பிடுவது போல் நடித்துக் காட்டினார்.
The post ரூ.2,152 கோடி தமிழக கல்வி நிதி பறிப்பு ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையை மீட்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.