×

ஒய்எம்சிஏவில் தேவா இசை நிகழ்ச்சி அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி நாளை (15ம் தேதி) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிற்பகல் 3 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்ேதசிக்கப்பட்டுள்ளன.
* நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டென்ஷன்) வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.
* சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் “யு” டேர்ன் மூலம் லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.
* அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ பிரதான சாலை நுழைவாயிலில் விவிஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
* நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப்சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.
* அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ ரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post ஒய்எம்சிஏவில் தேவா இசை நிகழ்ச்சி அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Anna Salai ,Deva ,YMCA ,Chennai ,Traffic Police ,Nandanam YMCA ,Dinakaran ,
× RELATED மாநகர பேருந்தில் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசாமி கைது