×

வலிப்பு நோயை குணப்படுத்த அதிநவீன அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை அறிமுகம்

சென்னை: வலிப்பு நோயை குணப்படுத்த அதிநவீன அறுவை சிகிச்சை திட்டத்தை அப்போலோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. வலிப்பு நோயை குணப்படுத்துவதற்கான அதிநவீன அறுவை சிகிச்சை முறை, அப்போலோ மருத்துவமனை சார்பில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அப்போது மருத்துவர்கள் அரவிந்த் சுகுமாரன் மற்றும் முத்துக்கனி கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: வலிப்பு நோய் அறுவை சிகிச்சைத் திட்டம் அப்போலோ மருத்துவமனை மற்றும் அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம் ஒருங்கிணைந்த செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிநவீன நோயறிதல், நவீன அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் கிடைத்தல் ஆகியவற்றை உறுதி செய்கிறது. இந்த மையங்கள், 3டி எம்ஆர்ஐ , சவுண்ட் ப்ரூப்ட் வீடியோ இஇஜி சூட், பிஇடி சிடி ஸ்கேன் ஆகிய அதிநவீன மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளன. இது துல்லியமான அறுவை சிகிச்சைக்கு முந்தைய மதிப்பீட்டை எளிதாக்குகிறது.

இந்த சிகிச்சைத் திட்டம் மேம்பட்ட துல்லியத்தன்மை நரம்பியல் கண்காணிப்பு, உள்நோக்கிய அல்ட்ராசவுண்ட், உள்நோக்கிய எலக்ட்ரோகார்டிகோகிராபி, உயர் துல்லிய செயல்பாட்டு நுண்ணோக்கி ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தியாவில் ஏராளமான எண்ணிக்கையிலான வலிப்பு நோயாளிகள் உகந்த மருத்துவ சிகிச்சை இருந்தபோதிலும் வலிப்பு நோய்த் தாக்கங்களுடன் தொடர்ந்து போராடுகிறார்கள். அறுவை சிகிச்சைத் திட்டம் இந்த நோய்க்குப் பொருத்தமான, உறுதியான தீர்வை வழங்கும். இது வலிப்பு நோயின் தாக்கம் இல்லாத வாழ்க்கையை வழங்கும். வலிப்புக்கான அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் நகர்ப்புறங்களில் கூட குறைவாகவே உள்ளது. எனவே சரியான நேரத்தில் சிகிச்சை என்பது முக்கியமானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வலிப்பு நோயை குணப்படுத்த அதிநவீன அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Apollo Hospitals ,Chennai ,Nungambakkam… ,
× RELATED பிபி பிரச்னையை கட்டுப்படுத்த உடனடி...