×

மெழுகுவர்த்தி ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்

பெரம்பூர்: ஓட்டேரி சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் மதனவள்ளி (85). இவரது கணவர் கன்னியப்பன், கடந்த 35 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு முனியம்மா, அமுதா என்ற மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.இதில் அமுதாவுடன் மதனவள்ளி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக இவர்களது வீட்டின் மின் இணைப்பை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்துள்ளனர். இதனால் மின் இணைப்பு இல்லாமல் மெழுகுவர்த்தி ஏற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மதனவள்ளி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்த போது, எதிர்பாராத விதமாக அது அவரது புடவையில் உரசி தீப்பிடித்தது. மதனவள்ளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 55 சதவீத தீக்காயங்களுடன் மதனவள்ளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post மெழுகுவர்த்தி ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Madhanavalli ,Oteri Suppurayan Street ,Muniamma ,Amuta ,Manikandan ,Amuda ,Anudati Padukayam ,
× RELATED வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டியை...