- தெற்கு யூனியன்
- ஜே. பேர்கெயின்
- முகநூல்
- ஆட்டமுக மாவட்டம்
- ஆட்டமுக தெற்கு யூனியன்
- ஜே
- நகர செயலாளர்
- செங்கல்பட்டு
- ஜே. பர்காவா
- ஆதிமுகா
- மாவட்ட செயலாளர்
- தின மலர்
மதுராந்தகம்: அதிமுக மாவட்ட செயலாளர் வெளியிட்ட வெளியிட்ட பேஸ்புக் பாதிவு காரணமாக, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் 25 ஆதரவாளர்களுடன் சென்று, ஜெ.பேரவை நகர செயலாளர் வீட்டு பெண்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றிபெற வேண்டும். அதற்கு அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என பேஸ்புக்கில் பதிவு நேற்று முன்தினம் செய்திருந்தார்.
இந்தப் பதிவுக்கு அச்சிறுப்பாக்கம் அதிமுக ஜெ.பேரவை நகர செயலாளர் முகமது இத்ரீஸ், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தை சரி செய் தலைவா என பதிவு போட்டிருந்தார்.இந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் அச்சிறுப்பாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரங்கராஜன், தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் அச்சிறுப்பாக்கம் நகர அதிமுக ஜெ.பேரவை நகர செயலாளர் முகமது இத்ரீஸ் வீட்டின் எதிரே நின்று கொண்டு, முகமது இதிரிஸையும், அவரது வீட்டிலிருந்த பெண்களை தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரங்கராஜன் மற்றும் அவர் ஆதரவாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் 25 ஆதரவாளர்களுடன் சென்று ஜெ.பேரவை நகர செயலாளர் வீட்டு பெண்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல்: அதிமுக மாவட்ட செயலாளர் பேஸ்புக் பதிவால் மோதல் appeared first on Dinakaran.