×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதி மாபெரும் கிரிக்கெட் போட்டி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: தயாநிதி மாறன் எம்பி தகவல்

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதி மாபெரும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. போட்டியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சார்பு அணிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கிடையே வருகின்ற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை-காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேப்பாக்கம், மெரினா விளையாட்டு மைதானத்தில் ”தலைவர் 72” கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியினை திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மேலும் 16ம் தேதி(ஞாயிறு மாலை) நடைபெறும் பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

மெரினா விளையாட்டு மைதானத்தில் வரும் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகளின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சென்னை மாநகர மேயர் பிரியா, தலைமை நிலையச் செயலாளரும், வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி எஸ் முருகன், திமுக துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு எம்.எல்.ஏ, மருத்துவர் பொன் கௌதம் சிகாமணி, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, மருத்துவர் நா.எழிலன், சி.வி.எம்.பி. எழிலரசன், வைரமுத்து ராஜா, ஐ.பி.செந்தில் குமார், ஜெ.ஜெ. எபினேசர், ஜெ.எல் ஈஸ்வரப்பன், எம்.பி.கிரி, எஸ்.ஸ்டாலின் குமார், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஜோசப் சாமுவேல், ஆ.தமிழரசி ரவிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதி மாபெரும் கிரிக்கெட் போட்டி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: தயாநிதி மாறன் எம்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. ,Stalin ,Udayaniti Stalin ,Dayaniti Maran ,Chennai ,Chief Minister ,Dimuka Sports Development Team ,K. ,Deputy Principal Assistant Secretary ,Sports Development Team ,M.U. ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…