- அமைச்சர்
- சிவசங்கர்
- தாம்பரம்
- நகராட்சி போக்குவரத்துக் கழக பயிற்சி மையம்
- குரோம்பேட்டை
- போக்குவரத்து அமைச்சர்
- சிவசாங்கர்...
- தின மலர்
தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில், 15வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று மற்றும் நாளை என 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நாளை 73 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ள நிலையில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஊதிய ஒப்பந்தம் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில், போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி, மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பிரபு சங்கர், அதிகாரிகள் மற்றும் சிஐடியு, தொமுச உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு appeared first on Dinakaran.