- பால் அமைச்சர்
- ராஜா கன்னாபன்
- கதி
- Ponnu
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- ஆளுநரின் வீடு
- ராஜகனபன்
- பொன்முடி
- பால்
- அமைச்சர்
- கிராமத் தொழில்கள்
- பொன்னுடு
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பொன்முடி ஆகியோர் வகித்து வந்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த “காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்” துறை, டாக்டர் கே. பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர் வனம் மற்றும் காதி துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.”இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தற்போது அமைச்சரவை இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
The post பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாக்கா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம்!! appeared first on Dinakaran.