×

திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருச்சுழி, பிப்.13: திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்துள்ளனர். தற்போது நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வழக்கமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். இதற்காக அந்தந்த பகுதியிலுள்ள விவசாயிகள் களத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களாக நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் களத்தில் தேங்கியுள்ளன.மேலும் விவசாயிகள் அதிக செலவுகள் செய்து விவசாயம் செய்துள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் களத்தில் கிடக்கும் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியவில்லையென கூறுகின்றனர்.இந்த நிலையில் நரிக்குடி அருகேயுள்ள அ.முக்குளம், முஸ்டக்குறிச்சி, முடுக்கன்குளம் ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்த விவசாயிகள், விரைவில் நரிக்குடி பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruchuzhi ,Narikudi ,Dinakaran ,
× RELATED நரிக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி