×

ஆர்.எஸ்.மங்கலத்தில் கொடியேற்று விழா

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.13: ஆர்.எஸ்.மங்கலத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 17வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர் மமக சார்பில் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். விழாவில் மாவட்டத் தலைவர் பட்டாணி மீரான் முன்னிலை வகித்தார். தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்ஷா கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மமக மற்றும் தமுமுக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

The post ஆர்.எஸ்.மங்கலத்தில் கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : Flag hoisting ceremony ,R.S.Mangalam. ,R.S.Mangalam ,Nagar MMC ,Humanity People's Party ,District Deputy Secretary ,Sakul Hameed ,Pattani Meeran… ,Dinakaran ,
× RELATED காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு