காரைக்குடி, பிப். 13: சின்னகுன்றக்குடியில் தைப்பூசத்தை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 150 மாடுகள் பங்கேற்றன. காரைக்குடி அருகே சின்னகுன்றக்குடியில் தைப்பூசத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. 165 மாடுகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பல்வேறு காரணங்களுக்காக 13 மாடுகள் நிராகரிக்கப்பட்டு 152 மாடுகள் மஞ்சுவிரட்டில் பங்கேற்றன. 25 மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்று போட்டியில் கலந்து கொண்டனர். மாடுகளை அடங்கிய வீரர்களுக்கு சில்வர் அண்டா உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர கட்டுமாடுகளாக ஆங்காங்கே 100க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பத்தூர் வட்டாசியர் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சின்னகுன்றக்குடி மஞ்சுவிரட்டில் 150 மாடுகள் பங்கேற்பு appeared first on Dinakaran.