- அவினாசி லிங்கேஸ்வரர்
- கோவில்
- டெரோட்டம்
- அவினாசி
- சுப்பிரமணியார் தேவதம்
- அவினாசிங்கேஸ்வரர் கோயில்
- தைப்பூச விழா
- கருணாம்பியம்மன்
- உத்தனமார்
- வள்ளி
- தெய்வம்
- அவினசிலிங்கேஸ்வரர் கோயில் மலை
அவிநாசி, பிப்.13: தைப்பூச விழாவில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றான கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா வந்து, தேரில் எழுந்தருளினர். பின்னர், மாலையில் மழலையர் தேர் எனப்படும் சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
The post அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் appeared first on Dinakaran.