கோவை, பிப். 13: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2022ம் ஆண்டு கணக்கின்படி 20 நிலைய செவிலியர்கள், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் 5 மருந்தாளுனர்கள் பணியிடம் காலியாக இருந்தது. இவை, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டது. இவர்களில், தற்போது 7 நிலைய செவிலியர்கள் மற்றும் 5 மருந்தாளுனர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களது ஒப்பந்த பணிக்காலம் 24.12.2024 அன்றுடன் நிறைவுபெறுகிறது.
இருப்பினும், இவர்களுக்கு மேலும் ஒரு வருட காலம் பணி நீட்டிப்பு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து, வரும் 25.11.2025 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 5 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.26 லட்சத்து 6 ஆயிரத்து 450 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post மாநகராட்சி செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு appeared first on Dinakaran.