×

வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் ரோஜா பூக்கள்: காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனை அமோகம்

கோவை, பிப். 13: ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் பரிசுப்பொருட்கள் அல்லது பூக்கள் கொடுத்து தங்களுடைய காதலை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில், ரோஜா பூக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஏராளமானவர்கள் ரோஜா பூக்களை வந்து வாங்கி செல்கின்றனர். இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது: காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் ரோஜாக்களை வாங்கி செல்கின்றனர். ஒரு ரோஜாவின் விலை 50 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் தன்மைக்கு ஏற்ப விலை வைக்கப்படுகிறது. துபாய், சார்ஜா, மஸ்கட் உள்ளிட்ட போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் கடந்த ஒரு வார காலமாக ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அவை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ரோஜா பூக்கள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் ரோஜா பூக்கள்: காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Coimbatore ,
× RELATED ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம்