- மங்களம்பேட்டை
- மணக்கொல்லை
- ஆலடி
- ஆலடி காவல் நிலையம்
- உதவி ஆய்வாளர்
- Duraikannu
- முருகன்
- ரூபலிங்கம்
- மணி
- அரசன்
மங்கலம்பேட்டை, பிப். 13:மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அருகே உள்ள மணக்கொல்லை கிராமத்தில், ஆலடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள முருகன் கோயில் அருகில் ரூபலிங்கம் மகன் மணி(37), அரசன் மகன் அரி(40), சாமிக்கண்ணு மகன் சேகர்(53), சீனிவாசன் மகன் ராதாகிருஷ்ணன்(25) ஆகியோர் ₹200 பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சூதாடிய 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.