×

திண்டிவனம் அருகே காரில் குட்கா கடத்திய 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

விழுப்புரம், பிப். 13: திண்டிவனம் அருகே குட்கா கடத்திய 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலைய போலீசார் கடந்த ஜனவரி 11ம் தேதி வந்தவாசி நெடுஞ்சாலையில் பட்டினம் கூட்ரோடு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜோதிராஜ்(32). அச்சரப்பாக்கம் தனசேகரன்(42) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து கார், குட்காவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷேக்அப்துல் ரகுமான் நேற்று அதற்கான உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திண்டிவனம் காவல் நிலைய போலீசார் 2 பேரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திண்டிவனம் அருகே காரில் குட்கா கடத்திய 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Villupuram ,Tindivanam police station ,Villupuram district ,Dinakaran ,
× RELATED அன்புமணிக்கு எம்பி பதவி ராமதாஸ் விரக்தி பேச்சு