×

சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kummidipundi track ,Chennai-Kummidipundi track ,BONNERI ,KAWARIPETTA ,Kummidipundi ,
× RELATED போக்குவரத்து காவல் அதிகாரிகள்,...