சிதம்பரம், பிப். 12: சிதம்பரம் அடுத்துள்ள மடத்தான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு மகன் குமார்(50). இவர் தெற்கு வாணியர் தெருவில் கோமதி உணவகம் என ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வாடகை பாக்கி தராமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓட்டல் நடத்தி வரும் இடத்தை நிர்வகித்து வரும் சிதம்பரம் காத்தாயி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜா (எ) ராஜாமணி (55) என்பவர், வாடகை மற்றும் முன்பணம் பாக்கி கேட்டு அவரை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, குமாரை, ராஜாமணி கடையில் இருந்த கத்தியை எடுத்து காலில் கிழித்தார். இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து ராஜாமணியை கைது செய்தனர்.
The post சிதம்பரத்தில் வாடகை கேட்டு ஓட்டல் கடைக்காரரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.