- வார்டு 94 மாச்சம்பாளையம்
- கோயம்புத்தூர்
- இடையர்பாளையம்
- செங்கப்பா நகர்
- செங்குட்டை வாய்க்கால்
- மாச்சம்பாளையம்
- வார்டு 94
- கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்
- தென் மண்டலம்
- தின மலர்
கோவை, பிப். 12: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 94வது வார்டுக்கு உட்பட்ட மாச்சம்பாளையம் பகுதியில் இடையர்பாளையம் பிரதான சாலையில் வடக்கு பகுதியில் செங்கப்பா நகர் முதல் செங்குட்டை வாய்க்கால் வரை அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் சேதம் அடைந்து, வண்டல் மண் படிந்து, குப்பை கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில், மழைநீர் இந்த கால்வாய் வழியாக செல்லாமல் சாலையில் தேங்குகிறது. அத்துடன், சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதியிலும் புகுந்து விடுகிறது.
இது, சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது. இதையடுத்து, இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், புதிதாக மழைநீர் வடிகால் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி உத்தரவிட்டனர். அதன்படி, தெற்கு மண்டல பொறியியல் பிரிவு அதிகாரிகள், ரூ.59.50 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்தனர். இது, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. அங்கு, கடந்த வாரம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு செய்து, கமிஷனர் உத்தரவிட்டார். விரைவில் டெண்டர் கோரப்பட்டு, கட்டுமான பணி துவங்கும் என மாநகராட்சி பொறியாளர்கள் கூறினர்.
The post 94வது வார்டு மாச்சம்பாளையம் பகுதியில் ரூ.59.50 லட்சத்தில் மழைநீர் வடிகால் கட்ட உத்தரவு appeared first on Dinakaran.