×

லாட்டரி விற்ற முதியவர் கைது

 

திருப்பூர்,பிப்.12: திருப்பூர் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டோக்கன் முறையில் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் ரோந்து பணி மேற்கொண்டபோது திருமுருகன்பூண்டி சிக்னல், ராஜூவ் காந்தி சிலை அருகே நின்று கொண்டிருந்த முதியவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் ராக்கியபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் ராஜ் (68) என்பதும், அவர் அப்பகுதியில் டோக்கன் முறையில் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் ராஜை கைது செய்து அவரிடம் இருந்த 12 லாட்டரி டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

 

The post லாட்டரி விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Thirumuruganpoondi ,Thirumuruganpoondi signal ,Raju Gandhi ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில் புதிய வடிவிலான மண்பாண்ட பொருட்களுக்கு மவுசு