தர்மபுரி, பிப்.12: இலக்கியம்பட்டி பஞ்சாயத்து, தர்மபுரி நகராட்சிக்கு இணையான மக்கள் தொகை கொண்டதாகும். இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில், ஏராளமான குடியிருப்புகள் மற்றும் அரசு, கலெக்டர் அலுவலகம், தனியார் அலுவலகங்கள் உள்ளன. பிடமனேரி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள், குடியிருப்பு பகுதியில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள், பிடமனேரி ஏரியில் கொட்டப்படுகிறது. இக்குப்பைகள் ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக ஏரியில் ஏலப்பதால், ஏரியை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கிறது. ஏரியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து, ஏரியை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஏரியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.