×

காதல் திருமணம் செய்த மைனர் பெண் கர்ப்பம் புதுமாப்பிள்ளை மீது போக்சோ வழக்கு கே.வி.குப்பம் அருகே

வேலூர், பிப்.12: கே.வி.குப்பம் அருகே காதல் திருமணம் செய்து மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய புதுமாப்பிள்ளை மீது காட்பாடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண், பிளஸ்2 படித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசன் (25), பால் வியாபாரி. இவர்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எழிலரசன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த அக்டோபர் மாதம் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ள மைனர் பெண், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அப்போது அவர் மைனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கே.வி.குப்பம் ஊர்நல அலுவலருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடந்தது. மேலும் இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிராம நல அலுவலர் ஆதிரை நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் பால் வியாபாரி எழிலரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் திருமணம் செய்த மைனர் பெண் கர்ப்பம் புதுமாப்பிள்ளை மீது போக்சோ வழக்கு கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Tags : POCSO ,K.V.Kuppam. ,Vellore ,Katpadi All Women Police ,K.V.Kuppam ,K.V.Kuppam taluka ,Dinakaran ,
× RELATED மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த...