சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசு யுஜிசி மாநில அரசின் உரிமைகளை எல்லாம் பறிக்கும் வகையில் கொண்டு வந்த அந்த திருத்தங்கள் அவற்றை திமுக தலைவர் வன்மையாக கண்டித்தார். ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதோடு நிற்காமல், தமிழக மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பிப்ரவரி 6ம் தேதி தலைநகர் டெல்லியில் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3வது கட்டமாக ஆவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மாதவரத்தில் துணை முதல்வரும் அணைக்கட்டில் பொதுச்செயலாளர் துரைமுருகனும், உத்திரமேரூரில் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் மற்ற இடங்களில் அமைச்சர்கள், முன்னணி தலைவர்களும் பங்கேற்றனர்.
எல்லா வகையிலும் ஒன்றிய அரசுக்கு பொருள் ஈட்டி தருகின்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. வரிபகிர்வுகளில் கூட 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி இந்திய அரசுக்கு நாங்கள் கொடுக்கிறோம். ஆனால் அதில் எவ்வளவு மத்திய அரசு எங்களுக்கு திருப்பி கொடுக்கிறது. 56 ஆயிரம் கோடி. இது எந்த வகையில் நியாயம். உத்திரபிரதேசத்திற்கும், பீகாருக்கும், குஜராத்துக்கும் அவர்கள் கேட்காமலே கொண்டு போய் கொடுக்கிறார்கள். ஏன் இந்த ஓரவஞ்சனை? எப்படிப்பட்ட நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இருக்கிறது. இந்த நிலையிலும் 13 திட்டங்களில் இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கியிருக்கிறது. படிப்பிலே உயர்ந்து கொண்டு போகிறார்கள். ஆனால், நாம் இருக்கின்ற பகுதியிலே ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலில் காரணமாக செய்கிறார்கள் என்று தமிழக மக்கள் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காக திடீரென திருப்பரங்குன்றம் பிரச்னையை கையில் எடுத்தார்கள்.
நிர்மலா சீதாராமன் சொல்லட்டும். ஆனால் பேசினால் கோபப்படுகிறார்கள். பாராளுமன்றத்தில் எங்கள் எம்பிக்கள் கேட்கும் கேள்விக்கு நியாயமான பதில் சொல்ல முடியவில்லை. ஏன் இந்த ஓரவஞ்சணை என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த போராட்ட ம் 3 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்தது ஒன்றிய அரசு திருந்தாவிட்டால் உரிய வகையில் பாடம் புகட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்.
The post யுஜிசி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டுவோம்: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை appeared first on Dinakaran.