சென்னை: தமிழ்நாட்டு நிதி வேறு மாநிலங்களுக்கு சென்றது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசின் போக்கு எல்லை மீறி செல்கிறது. தமிழ்நாட்டுக்கான ரூ.2152 கோடியை பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டிருப்பதன் மூலம் ஒன்றிய அரசு பகிரங்கமாக மிரட்டுகிறது.
மும்மொழி கொள்கை, புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பதால் தமிழ்நாட்டை பகிரங் கமாக மிரட்டுகிறது. ஒன்றிய அரசின் செயல்பாடு உரிமையை கேட்கும் தமிழ்நாட்டு மாணவர்களை தண்டிக்கும் செயலாகும். இந்திய வரலாற்றில் இதுவரை எந்த அரசும் கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கலை அரங்கேற்றியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீதான வெறுப்பை மீண்டும் ஒருமுறை பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக நிதி ரூ.2152 கோடி வேறு மாநிலங்களுக்கு பகிர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.
