×

மும்பை ஓபன் டென்னிஸ் தமிழக வீராங்கனை மாயா அரை இறுதியில் தோல்வி

மும்பை: மும்பை ஓபன் டபிள்யுடிஏ 125 டென்னிஸ் மகளிர் போட்டியில் அபாரமாக ஆடி அரையிறுதியில் நுழைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயது வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் சுவிட்சர்லாந்து வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். மும்பை ஓபன் டபிள்யுடிஏ எல் அண் டி 125 டென்னிஸ் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் ஒயில்ட்கார்ட் என்ட்ரியாக, உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறாத கோவையை சேர்ந்த 15 வயது வீராங்கனை மாயா ராஜேஷ்வரனுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட மாயா, முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த கால் இறுதிப் போட்டியில் உலகத் தர வரிசையில் 285ம் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை மெய் யமகுச்சியுடன் மாயா மோதினார். முதல் செட்டை அவர் கைப்பற்றியபோதும் இரண்டாம் செட் யமகுச்சி வசம் போனது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் மாயா அற்புதமாக ஆடி அந்த செட்டை கைப்பற்றினார்.

இதனால், 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் மாயா அமர்க்கள வெற்றியை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் 5ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்து நாட்டின் ஜில் தெய்ச்மான் உடன் மாயா மோதினார். அந்த போட்டியில் அனுபவத்துடன் சாமர்த்தியமாக ஆடிய தெய்ச்மான், 6-3, 5-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மும்பை ஓபன் ஒற்றையர் மகளிர் அரை இறுதியில் தமிழக வீராங்கனை மாயா தோல்வி அடைந்தாலும், இதற்கு முன் அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீராங்கனையாக சானியா மிர்ஸா திகழ்கிறார். அவருக்கு பின் அந்த மகத்தான கவுரவம் மாயாவுக்கு கிடைத்துள்ளது. மும்பை ஓபனில் மாயாவின் அற்புத ஆட்டம் காரணமாக வரும் வாரம் வெளியாகும் உலக டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் 600 இடங்களுக்குள் அவர் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் ஒற்றையர் மகளிர் டென்னிஸ் போட்டிகளில் சிறந்த இந்திய வீராங்கனையாக மாயா உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டென்னிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post மும்பை ஓபன் டென்னிஸ் தமிழக வீராங்கனை மாயா அரை இறுதியில் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Mumbai Open ,Maya ,MUMBAI ,MAYA RAJESHWARAN ,TAMIL NADU ,AUDI ,WDA 125 ,SWITZERLAND ,WDA L Team T 125 ,Veerangana Maya ,Dinakaran ,
× RELATED ஐடிஎப் ஜூனியர் டென்னிஸ்: நடால்...