- சென்னை ஓபன் டென்னிஸ் ஜப்பான்
- சென்னை
- சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் இறுதிப் போட்டி
- இரட்டையர்
- நுங்கம்பாக்கம், சென்னை
- தின மலர்
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பான் இணை அபாரமாக ஆடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் வளாகத்தில் நேற்று இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி நடந்தது.
இதில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-சாகித் மைனேனி இணை, ஜப்பானின் சிந்த்ரோ மொசிசுகி-கெய்டோ வுசூகி இணையுடன் மோதியது. சிறப்பாக ஆடிய ஜப்பான் இணை, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற ஜப்பான் வீரர்களுக்கு ரூ.6.76 லட்சம், இந்திய வீரர்களுக்கு ரூ.3.91 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
The post சென்னை ஓபன் டென்னிஸ் ஜப்பான் இணை வெற்றி appeared first on Dinakaran.