×

பெரம்பூர் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது


அண்ணாநகர்: ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் மதுவிலக்கு உதவி ஆணையர் சங்கு தலைமையில் தனிப்படை அமைத்து கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர். மற்றொரு தனிப்படை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்காணித்தனர். இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வந்த இருவரை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்கள் வைத்திருந்த கஞ்சா பார்சலை கீழே போட்டு விட்டு தப்பினர்.

அவர்களை விரட்டிச்சென்று போலீசார் கைது செய்தனர். இதுபற்றி நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார்(28), வசந்தகுமார்(27) என தெரியவந்தது. இவர்கள், ஒடிசா, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து நாமக்கல் மாவட்டத்துக்கு கொண்டு செல்ல இருந்தனர். இவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பெரம்பூர் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur train station ,Annanagar ,Annanagar Abstinence Assistant Commissioner Association ,Odisha ,Andhra ,Coimbed Bus Station ,Omni Bus ,Station ,Dinakaran ,
× RELATED பிரேக் பிடிப்பதற்கு பதிலாக...