×

டெல்லி சட்டப்பேரவை மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது; அதன் பிறகு 8.30 மணிக்கு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டி. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணப்படுவதை ஒட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி; 3வது முறையாக அரியணை ஏறுமா ஆம் ஆத்மி?; 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்குமா பாஜக? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post டெல்லி சட்டப்பேரவை மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Delhi Legislature ,Erode ,East Midterm ,Erode East ,Dimuka ,C. CHANDRAKUMAR ,SITALAKSHMI ,Midterm Election ,Dinakaran ,
× RELATED 27 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த பாஜக : டெல்லி சட்டப்பேரவை கூடியது