×

பள்ளி வாகனத்தில் டீசல் திருட்டு ஒருவர் கைது, மற்றொருவர் தலைமறைவு

 

நீடாமங்கலம், பிப். 8: கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் என்ற ஊரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள் வேலை நேரம் முடிந்த பிறகு பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி வளாகத்தில் வைத்தியிருந்த வாகனத்தில் டீசல் திருடியது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த பள்ளி வாகனத்தின் டிரைவரான கொட்டார குடியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அடியக்கமங்கலத்தை சேர்ந்த முகமது ரபிக் (34) என்பவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் முகமது ரபிக் மற்றும் அதே ஊரை சேர்ந்த பஜ்ருல்ஹக் ஆகிய இருவரும் சேர்ந்து பள்ளி வாகனத்தில் இருந்து டீசல் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து முகமது ரபிக்கை கைது செய்த போலீசார் பஜ்ருல் ஹக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post பள்ளி வாகனத்தில் டீசல் திருட்டு ஒருவர் கைது, மற்றொருவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Ammaiyappan ,Koratachery ,Dinakaran ,
× RELATED வையாளத்தூர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி