- மஹா மாரியம்மன் கோயில்
- மகா மாரியம்மன் கோயில்
- முசிரி காலர் தெரு
- இக்கோயில்
- திருவூலக பூஜை
- மகா மாரியம்மன்
- திருவூலகு பூஜை
முசிறி, பிப்.8: முசிறி கள்ளர் தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை மாத வெள்ளிகிழமை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும் வேண்டி விளக்கேற்றி பூஜை செய்தனர். அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.