×

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணிகள் நகர்மன்ற தலைவர் ஆய்வு

 

திருத்துறைப்பூண்டி, பிப்.8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 24 வார்டுகளிலும் முதல் கட்டமாக வீடு வீடாக சென்று நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகும் தினந்தோறும் வார்டுகளில் நடக்கும் பணிகளை காலை 5 மணி முதல் பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் 9வது வார்டு பெரிய கோயில் சன்னதி தெரு பகுதியில் தூய்மை பணியாளர்களின் அன்றாட பணியை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டார். இதில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன், சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார மேற்ப்பார்வையாளர்கள் வீரையன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணிகள் நகர்மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruthuraipoondi Municipality ,Tiruthuraipoondi ,Tiruvarur district ,Municipal Chairman ,Kavita Pandian ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு பட்ஜெட்...